சென்னை: 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசினார்.

டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழா ஏப்ரல் 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை, நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்சரியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் சாலை மேம்பாடு குறித்து விரிவாக விவாதித்தார். இந்த சந்திப்பு மிக ஒரு நீண்ட சந்திப்பாக இருந்தது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்ற மத்திய மண்டபத்தில் திமுக எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து பேசினார். அப்போது, டெல்லி அறிவாலயம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
Patrikai.com official YouTube Channel