சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மாணவர்களுக்கான “மனம்” திட்டம் உள்பட பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் .

மன நலக் காப்பகத்தை ரூ.40 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மையத்திற்காக கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
வெளியிட்டார். மேலும், 75 புதிய மேம்படுத்தப்பட்ட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட 108 அவசரகால ஊர்திகள் மற்றும் மாணவர்களின் மன நலம் காக்கும் ‘மனம்’ திட்டத்தை தொடங்கி வைத்து, சென்னை அரசு மன நலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து, அரசு மன நலக் காப்பகத்தை ரூ.40 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தி தமிழ்நாடு மன நலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனம் என்ற ஒப்புயர்வு மையத்திற்காக கட்டப்படவுள்ள கட்டடத்தின் முப்பரிமாண வரைபடத்தைதமிழ்நாடு மமுதலமைச்சர் ஸ்டாலின்வெளியிட்டார்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்  பல்வேறு புதிய திட்டங்கள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதில், முக்கியமானது,  மாணவர்களுக்கு மனநலன் காக்கும் “மனம்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் “மனநல நல்லாதரவு மன்றங்கள்” தொடக்கம் மற்றும், கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் இடைநிலை பராமரிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்த திட்ட பணிகளின் மதிப்பு 2.36 கோடியாகும்.

தொடர்ந்து, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் செயல்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் செய்த கைவினை பொருட்கள், விவசாய பொருட்களை முதல்வர் பார்வையிட்டார். மேலும், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடையே விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் அவர்கள் வென்ற பதக்கங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.