விழுப்புரம்: திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பேருந்து நிலையத்தையும் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் 2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் விழா ‘என் கனவு-என் எதிர்காலம்’ இணையதள தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்கவிழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். , திண்டிவனம்-செஞ்சி சாலையில் கொள்ளார் கிராமத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்கினார்.
தொடர்ந்து, ‘என் கனவு என் எதிர்காலம்‘என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகளை முதல்வர் வழங்கினார்.
முன்னதாக திண்டிவனத்தில் அன்னை இந்திராகாந்தி பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். 2021ல் 234 தொகுதிகளுக்கும் வந்து மக்கள் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றேன். தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கைகளை பெற்று திராவிட மாடல் ஆட்சி அமைத்தோம் எனவும் கூறியுள்ளார்.
விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று காலை புறப்பட்டு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து திண்டிவனம் தீர்த்தகுளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தியார் திடல் வரை சாலை வலத்தை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியை வந்தடைத்தார். அரசு விழா முடிந்த பின்னர் சாலை மார்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் வருகையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதல்வர் வரும் வழித்தடப் பகுதிகளில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
[youtube-feed feed=1]