சென்னை: சென்னையின் மைய பகுதியான தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே அமைக்கப்பட்டு வரும் 4 வழித்தட சாலைப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு ஆய்வு செய்தார்.
இந்த உயர்மட்ட சாலையானது நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரூ.621 கோடியில் 3.20 கி.மீ.க்கு கட்டப்படும் நான்கு வழித்தட உயர்மட்ட சாலைaக அமைக்கப்படுகிறது. அதன்படி, அண்ணா சாலையில் தேனாம் பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப் பணியை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தற்போது அந்த பகுதியில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக, சென்னை, அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலில் 3.20 கி.மீ. தூரத்தைக் கடக்க 30 முதல் 45 நிமிடங்கள் ஆகின்றன. இந்தபாலம் அமைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால் 10 நிமிடங்களில் சாலையை கடந்துவிட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்த முதல்வர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
[youtube-feed feed=1]