சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம், 6 புதிய சமத்துவபுரங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத்தல் 6 இடங்களில் ரூ.42.40 கோடியில் 6 புதிய சமத்துவபுரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ரூ.212 கோடியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள், , பள்ளி கட்டடங்கள், பாலங்கள் மற்றும் ரூ.1,238 கோடியில் 9,696 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்