சென்னை: நாமக்கல் பால்பண்ணை, சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள்  உள்பட பல்வேறு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார் .

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பால்பண்ணையை திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் ரூ.89.28 கோடியில் கட்டப்பட்ட அதிநவீன பால்பண்ணையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை அம்பத்தூரில் ரூ.11.57 கோடியில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார் முதல்வர்.
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.86.04 கோடி செலவில் முடிவுற்ற 63 பணிகளை திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் சார்பில் ரூ.635.30 கோடி செலவில் முடிவுற்ற 22 பணிகளை திறந்து வைத்தார். ரூ.335.62 கோடி மதிப்பில் 8 புதிய திட்டங்களுக்கும், ரூ.932 கோடி 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலக பயன்பாட்டிற்கு ரூ.47 லட்சத்தில் 3 வாகனங்களை வழங்கினார் முதல்வர்.

 

[youtube-feed feed=1]