சென்னை: முதல்வர் ஸ்டாலின் குடியிருக்கும் பகுதியான சென்னை கோபாலபுரத்தில்  ரூ.8 கோடியில்  கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி கட்டடத்தை  இன்று காலை திறந்து வைத்தார்.

இந்த  குத்துச்சண்டை அகாடமி  சுமார்,  2,500 சதுர அடியில் 2 பாக்சிங் ரிங் உடன், ஒரே சமயத்தில் 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ. 8 கோடி செலவில் கலைஞா் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடெமி சென்னை கோபாலபுரத்தில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கென கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது பாா்வையிட்டு ஆய்வு செய்து வந்தாா்.

இதையடுத்து, இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று  துணைமுதல்வர் ஸ்டாலின் அங்கு சென்று ஆய்வு செய்தார்.  இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரம் சென்று,  குத்துச்சண்டை அகாடமியை  திறந்து வைத்தார்.