காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

Must read

சென்னை: சமீபத்தில் நடைபெற்று முடிந்த 22வது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற 22ஆவது காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற மேசைப்பந்து வீரர்கள்  ஏ.சரத்கமல் மற்றும் திரு. ஜி.சத்தியன் வெற்றி பெற்றனர். அதுபோல ஸ்வாஷ் போட்டியில் சவ்ரவ் கோஷல் மற்றும் திருமதி தீபிகா பல்லிக்கல் வெற்றி பெற்றனர். அதுபோல,  லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் செல்வி பவானி தேவி  பதக்கம் சென்றார். அதுபோல, இந்தியாவின் 75ஆவது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ் ஆகியோருக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கப்பட்டது.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ. 3.80 கோடிக்கான காசோலைகளை வழங்கினார். அவர்களுடன் அமர்ந்து குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.

More articles

Latest article