சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். அதன் காரணமாக, அவ்வப்போது அவர் உடற்பயிற்சி, சைக்கிளிங் செல்வது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வைலாகி வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை கோவளம் முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பிறகும் தொடர்ந்து உடற்பயிற்சியில் அக்கறை காட்டி வருகிறார். ஏற்கனவே கடந்த ஜூன் ர் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை மேற்கொண்ட சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அப்போது  இடையே, வழியில் மக்களையும் சந்தித்து பேசினார். இளைஞர்கள், இளைஞிகள் என  பலரும் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். அதுபோல இன்றும் தலையில் ஹெல்மெட்டுடன் முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரைசைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். அப்போது இடையே பொதுமக்களை சந்தித்து பேசியதுடன், வழியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ அருந்தினார்.

கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் சென்னை அடையாறு தியாசிப்பிக்கல் சொசைட்டி பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.