சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க அடிக்கடி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று வருவதை, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்லி வந்தோம்; டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? என்று முதலவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
,இதுதொடர்பாக “முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா இபிஎஸ் சென்றுள்ளார்?
தமிழ்நாட்டில் நிறைவேற்றாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா?
மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா?
தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன எரியாவிட்டால் என்ற மனநிலையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தேர்தலை சந்திக்கவே டெல்லியின் சம்மதம் கேட்போரின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டால் என்னாவது?
என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த மக்கள் டெல்லியின் ஆதிக்கம் அதன் அடிமைக்கூட்டத்தை அனுமதிக்கமாட்டனர்.
சுயநலனுக்காக டெல்லியின் கட்சியை அடமானம் வைத்தவரகள் தமிழ்நாட்டை அடகுவைக்க தயங்கமாட்டர் என்பதை மக்கள் அறிவர்.
எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டெல்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் வலிமை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் நம்பிக்கை.
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வலிமையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம்; களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.”
[youtube-feed feed=1]