சென்னை:  விடுமுறைக்கு பின் நாளை சட்டப்பேரவை  மானியக் கோரிக்கை கூட்டத்தொர்  மீண்டும்கூட உள்ள நிலையில், இனிவரும் நாட்களில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் விவாதம்  குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர்மு.க.ஸ்டாலின் ஆலோசனை  நடத்தினார்.

 

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர் கடந்த மார்ச் மாதம்  18-ஆம் தேதி  தொடங்கியது அன்றைய தினமே 2022-2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 2022-2023-க்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 21, 22 மற்றும் 23-ஆம் தேதிகளில், பட்ஜெட்  மீதான விவாதம் நடைபெற்றது.  24ந்தேதி  இறுதிநாள் அமர்வில் பட்ஜெட் விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தனர். அப்போது பல்வேறு சட்டதிருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து,  மீண்டும் சட்டப்பேரவை அமர்வு துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதிஒதுக்கீடு செய்து ஒப்புதல் பெறுவதக்காக  கடந்த ஏப்ரல் மாதம்  6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 10 ஆம் தேதி வரை  22 நாள்கள் நடைபெறவுள்ளன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாங்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், மே 4ந்தேதி (நாளை) அறநிலையத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம், 5-ம் தேதி போக்குவரத்து, சுற்றுலா, 6-ம் தேதி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, 7-ம் தேதி திட்டம், வளர்ச்சி, பொது, சிறப்பு திட்ட செயலாக்கம், நிதி, மனிதவளம் உள்ளிட்ட துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த அமர்வின் இறுதிநாட்களான  மே 9, 10-ம் தேதிகளில் உள்துறையின் கீழ் வரும் காவல், தீயணைப்புத் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று, இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்க உள்ளார்.

இதை முன்னிட்டு,  துறைகளின் அமைச்சர்கள், அலுவலர்களுடன் முதல்வர்  ஆலோசனை நடத்தினார். தலைமை செயலத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில்,  உள்துறை, போக்குவரத்து, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், அறநிலையத் துறை மானிய கோரிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.