சென்னை: சிறிய வகையிலான கணினியை உருவாக்கிய திருவாரூர் மாணவனை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார்.
திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் எஸ்.எஸ். மாதவ். 9ம் வகுப்பு படித்து வரும் இவர், கணினி மீது தீவிர ஆர்வம் கொண்டவர். கணினி சம்பந்தமான ஜாவா, சி, சி பிளஸ் உள்பட பலவற்றை படித்துள்ள நிலையில், கம்ப்யூட்டர் ஹார்டுவேரிலும் தீவிர ஆர்வம் கொண்டனர். இவர் கொரோனா பொதுமுடக்கத்தை காலத்தில், தனது ஆர்வத்தை மேலும் வளர்ச்சி, சிறிய அளவிலான சிபியு ஒன்றை வடிவமைத்துள்ளார்.
இந்த கையடக்கமான மினி சிபியு கண்டுபிடிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எஸ்.எஸ். மாதவ்-ஐ நேரில் வரவழைத்து,இ அவரது கண்டுபிடிப்பை பாராட்டியதுடன, கணினி தொடர்பான அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். அப்போது, எஸ்.எஸ். மாதவ் பெற்றோர் உடனிருந்தனர்.