தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை 4:10 மணியளவில் காலமானார்.

79 வயதான கிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வயது முதிர்வு காரணமாக பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று மரணமடைந்தார்.

1965 ம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர் 2009 ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் தமிழில் வெளியான கந்தசாமி படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் கடைசியாக 2016 ம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ என்ற படத்தில் நடித்திருந்தார்.

திரைப்படங்களை தவிர அரசியலிலும் சில காலம் ஈடுபட்ட நடிகர் கிருஷ்ணா 1989 ம் ஆண்டு ஆந்திராவின் ஏலூரு தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரா தேர்ந்துக்கப்பட்டார்.

இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஏரளாமானவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கிருஷ்ணாவின் முதல் மனைவியும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மகேஷ் பாபு-வின் தாயாருமான இந்திரா தேவி செப்டம்பர் 28 ம் தேதி மறைந்த நிலையில் தற்போது கிருஷ்ணாவின் மறைவு மகேஷ் பாபுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவியும் நடிகையுமான விஜய நிர்மலா 2019 ம் ஆண்டு மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.