முதல்வர் குறித்து வதந்தி: வங்கி ஊழியர் உட்பட இருவர் கைது

Must read

 
சென்னை:
டந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்து சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.
images-1
இதையடுத்து, “வதந்தி பரப்பும் 50 பேரை கண்காணித்துக்கொண்டிருக்கிறோம்” என்று அறிவித்த காவல்துறை, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த நிவலையில், வதந்தி பரப்பியதாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடையைச் சேர்ந்த தங்கதுரையின் மகன் திருமணிச்செல்வம் (வயது 28) வங்கி ஊழியர்.
சென்னை பம்மல் சண்முகத்தின் மகன் பாலு என்கிற பால சுந்தரம் (வயது 28) தனியார் துறை ஊழியர்.
இவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், “வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும்” என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

More articles

Latest article