முதல்வர் பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது காவல்துறையில் புகார் 

Must read

பாத்திமா - டிராபிக் ராமசாமிசென்னை:
முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில்  செயல்பட்டு வரும் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.  அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்தி பரவி வருகிறது. இப்படி வதந்தி பரப்பியவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பும் வகையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மற்றும் அவரது உதவியாளர் பாத்திமா ஆகியோர் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் கிஷோர் கே.சுவாமி என்பவர் புகார் அளித்துள்ளார்.
 

More articles

Latest article