சென்னை:
னாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதே நாளில் டெல்லியில் மதியம் 3 மணிக்கு மம்தா பானர்ஜியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சருடன், பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா, பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.

சுமார் 20 நிமிட நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனையில் சோனியா அழைப்பை ஏற்று அவர் சொல்லும் வேட்பாளரை ஆதரிக்கலாமா? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனை குறித்து திமுக கட்சி சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.