சென்னை: பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ரூ.1,627.83 கோடி மதிப்பில் 12,525 கிராம ஊராட்சிகளில் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை முத்தாலகுறிச்சியில் திட்டத்துக்காக கண்ணாடிஇழை கம்பி வடம் பதிக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. இந்ததிட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட துறைசெயலாளர்கள் கலந்துகொண்டனர்.