சென்னை: மாநில கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு அமைத்துள்ள குழுவினரோடு வரும்15-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக தமிழகஅரசு, மாநில கல்விக்கொள்கையை வகுக்க முடிவு செய்து, அதற்கான குழுவை அமைத்துள்ளது.  ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து,  மாநில கல்விக்கொள்கைக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியாகின.

இந்த நிலையில் வரும் 15ந்தேதி மாநில கல்விக்கொள்கையை வகுக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினரோடு,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.