சென்னை: தருமபுரியில் இன்று ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தருமபுரி அரசு மருத்துவமனையில்  பேறுகால அவசர சிகிச்சை மையம், சிசு பராமரிப்பு மையத்தை இன்று திறந்து வைத்தார்.

2நாள் பயணமாக சேலம், தருமபுரிக்கு சென்றுள்ள முதல்வர்,நேற்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டதுடன், ஏராளமான நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, இன்று கலை தருமபுரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்  ரூ.10 கோடியிலான 11 கட்டிடங்கள், ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டிடத்தில் தரைத் தளத்தில் 33 படுக்கைகள், முதல் தளத்தில் 22 படுக்கைகள், இரண்டாம் 95 படுக்கைகள், 4ம் தளத்தில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 200 படுக்கைகள் மூலம் கர்ப்பிணிகள். பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.  அந்த கட்டப்பட்டிருந்த புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த பேறுகால அவசர சிகிச்சை மையம், சிசு பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினார்.

அத்துடன், தருமபுரி மாவட்டத்தில்  100% கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 ஊராட்சிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி  பாராடினார்.

இதனையடுத்து, கால்நடை மருத்துவமனை, வேளாண் விரிவாக்க மையம், கல்லூரி விடுதி கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.