சென்னை: சென்னை திருவான்மியூரை அடுத்த தரமணி இணைப்பு சாலையில் IT/ITES தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை தரமணி டிஎன்எஃப் நிறுவனதின் (DLF) ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் டிஎல்எப் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த வளாகம் ரூ.5,000 கோடி முதலீட்டில் 27 ஏக்கரில் கட்ட DLF நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கு கட்டப்படும் வளாகத்தில், 2025க்குள் ஐடி நிறுவனங்கள் பெருமளவு முதலீடு செய்யவும், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம். சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது என சூட்டிக்காட்டினார். கொரோனா காலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்கு திமுக உதவியது என பேசினார். கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என கூறினார். பொய் பிரச்சாரங்களை முறியடித்து திமுக மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறதுஎன்றார்.