சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்ட அமர்வு  கடந்த மாதம் (பிப்ரவரி) 11ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து, இன்று இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள ஆளுநரின் நடவடிக்கை, பி.எஃப் வட்டி குறைப்பு ஆகியவற்றை விவாதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.