சென்னை; உதகையில் ஜான் சல்லிவன் சிலை மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையின் முக்கோண சந்திப் பில் ஜான் சல்லிவன் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்குச் ‘சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை உதகையில் தொடங்கி வைத்த முதல்வர் அங்கு சுற்றிப் பார்த்தார். அப்போது குழந்தைகளின் நலன் குறிந்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார். தொடர்ந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ், குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில், 200 ஆண்டுகளுக்கு முன்பு உதகை நகரினை கண்டறிந்து கட்டமைத்த “ஜான் சல்லிவன்” அவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கலச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து ஊட்டி நகரின் 200-ஆவது ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்டங்களையும், உதவிகளையும் வழங்கினார்.