சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
கொரோனா தொற்று மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக, முன்களப்பணியாளர்கள் மற்றும் 60வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி நேற்றுமுதல் தொடங்கி உள்ளது. இதையெடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் , அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டார். மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 9ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
இதுகுறித்து டிவிட் பதிட்டுள்ள ஸ்டாலின், முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டேன். அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.