சென்னை: முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்திய மொழிகளின் மத்திய நிறுவன முன்னாள் துணை இயக்குனர் ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதினை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த விருதுக்க,  முன்னாள் தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி, அவருடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கி “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் அறக்கட்டளை” ஒன்றை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நிறுவியுள்ளார்.

இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த தமிழறிஞருக்கு இந்தியாவிலேயே மிக மதிப்புயர்ந்த ரூ 10 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும், பாராட்டிதழும், ஐம்பொன்னாலான நினைவுப் பரிசும் அடங்கிய விருது அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது  முனைவர் க.ராமசாமிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதுடன் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.