சென்னை: “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திமுக அரசு பதவி ஏற்றபிறகு ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த  பல்வேறு திட்டங்களால் பல லட்சம்  பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளை உரிய வகையில் சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்வதற்கு “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்திலிருந்து, முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்கள் நலமா என்ற திட்டத்தை தொடங்கி வைத்து. பயனாளிகளிடம் நோடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.

 இந்j நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப, கூடுதல் தலைமைச் செயலாளர்/ முதலமைச்சரின் செயலாளர்-|திரு.நா. முருகானந்தம், இ.ஆ.ப. முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் திரு.த.மோகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசுகையில், “அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில் ‘நீங்கள் நலமா?’ என்ற திட்டம் மார்ச் 6ம் தேதி தொடங்கப்படும்” என அறிவித்தார்.

இந்த திட்டத்தின் மூலம், முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் போன்ற அனைத்து அரசு அதிகாரிகளும் தமிழ்நாடு மக்களை செல்போனில் தொடர்பு கொண்டு மக்களின் குறைகள் குறித்து கேட்டறியவுள்ளனர். அந்த கருத்துகளின் அடிப்படையில், திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி, இன்று இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. திமுக அரச பதவி ஏற்றபிறகு அமல்படுத்தப்பட்டுள்ள  திட்டங்களின் பலன்கள் பயனாளர்களை சென்றடைகிறதா?  என்பதை உறுதி செய்யும் வகையில், “நீங்கள் நலமா?” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.  இந்த  திட்டத்தின் மூலம் முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை செயலாளர்கள், துறையின் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் மக்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு திட்டங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.