சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் லலித்கலா அகாடமியில் புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி தொடங்கி வைத்தார்.  சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள லலித்கலா அகாடமியில் ஏற்பாடு செய்துள்ள, இநத்  புகைப்பட கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கத்தில், பல்வேறு பத்திரிகைகளின் புகைப்படக் கலைஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இயற்கை சீற்றங்கள், முக்கிய சம்பவங்கள் போன்ற நிகழ்வுகளில் தாங்கள் துணிச்சலுடன், சிரமப்பட்டு எடுத்தசிறந்த புகைப்படங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் இவர்கள் காட்சிப்படுத்துகின்றனர். அந்த புகைப்படங்களை கொண்டு, ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன், விழாவில்,புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளார். நிகழ்வுக்கு அமைச்சர் சேகர்பாபு தலைமை வகிக்கிறார். இந்து என்.ராம் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,  பேனாவுக்கு எப்படி சக்தி உள்ளதோ, அதே மாதிரி புகைப்படத்திற்கும் சக்தி உள்ளது என்றவர்,  லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது, கலைஞருடைய பேனா என கூறியதுடன் வள்ளுவர் கோட்டம், டைடல் பார்க் போன்றவற்றை உருவாக்கியதற்காக கையெழுத்திட்ட பேனா; குடிசைகளை மாற்றி அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்ட வேண்டும் என்று குடிசை மாற்று வாரியத்திற்காக கையெழுத்து போட்ட பேனா என்றார்.

மேலும்,  லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது, கலைஞருடைய பேனா. பேனாவுக்கு எப்படி சக்தி உள்ளதோ, அதே மாதிரி புகைப்படத்திற்கும் சக்தி உள்ளது; எந்த பேனா என்று உங்களுக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

இக்கண்காட்சி இன்று தொடங்கி, பிப்.15ம் தேதி வரை ஒருவார காலம் நடைபெறுகிறது. இதில்,தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் புகைப்படக்கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்களின் தொகுப்பை ஒரே இடத்தில் காணலாம் என்பதால், புகைப்பட ஆர்வலர்கள் இதை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம் என தெரிவித்துள்ளனர், இதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.