சென்னை: கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என சென்னை பெரம்பூரில்  9 கிலோ நகைகள் கொள்ளை தொடர்பாக  பேட்டி அளித்த கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பலூர் நகைக்கடை ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி, உள்ளே சென்று 9 கிலோ நகைகள் கொள்ளை  நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் நடைபெறும்  சாலையில், தைரியாக ஒரு கும்பல் வெல்டிங் மெஷின் கொண்டு வந்து ஷட்டரை வெட்டி கொள்ளையடித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜே.எல்.கோல்டு ஹவுஸ் நகைக்கடை பூட்டை உடைத்து 9 கிலோ நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என கூறிய  சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் அன்பு. கொள்ளையர்களை பிடிக்க உதவி ஆணையர்கள் 3 பேர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகிறது. இதுதொடர்பான விசாரணையும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது.  நகைகளை  கொள்ளையடித்தவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்ற கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டிப்பாக துப்பு கிடைக்கும் என்றார்.

நகைக்கடையின் ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி ரூ.20லட்சம் நகைகள் கொள்ளை! இது சென்னை சம்பவம்..