சென்னை: பெரம்பூர் அருகே செயல்பட்டு வந்த பிரபல நகைக்கடையில், இரவு கடையின் ஷட்டரை வெல்டிங் மெஷினை வைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ள சம்பவத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.இந்த கொள்ளை சம்பவம், முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி அருகே உள்ள பகுதியில் அரங்கேறி உள்ளது.

சென்னை பெரம்பூர் பகுதி பெரவள்ளுர சாலையில் அமைந்துள்ளத பிரபல நகைக்கடை ஜே.எல்.கோல்ட் பேலஸ். இந்த நகைக்கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள், ஷட்டரை வெல்டிங் மெஷின் மூலம் வெட்டி, துளையிட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இரண்டு மாடி கட்டிங்களைக் கொண்ட இந்த நகைக்கடையில் இரண்டாவது தளத்தில் கடையின் ஓணர் ஸ்ரீதர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

கடந்த 8 வருடங்களாக நகைக்கடை செயல்பட்டு வரும் நிலையில், இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ஓட்டை போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து கடைக்குள் சென்ற பார்த்தபோது, கடையின் உள்ளே இருந்த லாக்கர் ரூம் கதவை கொள்ளையர்கள் வெல்டிங் மிஷினால் உடைத்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து  ஸ்ரீதர் திருவிக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையில் கடையில் கடந்த 3 மாதங்களாக காவலாளி இல்லாததை நோட்டமிட்டு திருட்டுச் சம்பவம் நடந்திருப்பதாகவும், கடையின் உட்புறம் இருந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகும் டிவிஆர் சாதனத்தையும் மர்ம நபர்கள் கொள்ளயடிதுச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.