சென்னை : சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து,  மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு விடுதிக் கட்டடத்தையும் திறந்து வைத்ததுடன்,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் அவர் வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை சென்னை மாநில கல்லூரி வளாகத்தில்  ரூ.63 கோடியில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை   திறந்து வைத்தார். உயர்கல்வித்துறை சார்பில் ரூ.63 கோடி செலவில் சென்னை மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.  இதை திறந்து வைத்து  கலைஞர் அரங்கத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து,  சென்னை மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு விடுதி கட்டிடத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையடுத்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

[youtube-feed feed=1]