சென்னை: சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Capitaland – Radial IT Park சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை பல்லாவரம் ரேடியல் சாலையில்  திறந்து வைத்தார்.

சுமார், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் கேபிடல் லேண்ட் டெக்னோ பார்க் என்ற தனியார்  தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி ஏற்பட்டுள்ளது. முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை கண் கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. உலக அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்த அரசு மீதும் தமிழ்நாடு மீதும் கேபிடல் லேண்ட் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி. வால்மார்ட், ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் தங்கள் ஆய்வை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் புதிய தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டு வருகிறது. ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம்.

தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து கொண்டு வருகிறது. அதற்கு சான்றாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் கேப்பிட்டல் நிறுவனம் இணைந்திருப்பது எங்களுக்கெல்லாம் பெருமையாக உள்ளது. 50000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிகிற அளவுக்கான உலகத்தை வாய்ந்த அலுவலக இடங்கள் கட்டி தர நிர்ணயிக்கப்பட்டிருக்கிது. இது இன்றைக்கு மிக மிக தேவையான ஒன்றாக இருக்கிறது.

தொழில் துறை முதன்மை மாநிலமாக முன்னேறு வேண்டுமென நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த வளர்ச்சி சீராகவும் பரவலாகவும் இருக்க வேண்டும் என மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நகரங்களையும் 9 நீயோ டைகர் பார்க்குகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்கும் வகையில் உலக தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன், துறை சார்ந்த அமைக்கப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் துறை சார்ந்த கொள்கை அறிக்கைகளை வெளியிட்டு வருகிறோம்.

Ups , Walmart , ஹிட்டாச்சி எனர்ஜி போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவி இருக்கிறார்கள்.

உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பயனைக் கொடுக்கும். இந்த வேகத்தை பார்க்கும் என்ற பொழுது 2030 ஆண்டிற்குள், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டே போகுது” என்று பேசினார்.