சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச் செயலகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, ரூ.1,933.7 கோடி மதிப்பிலான 206 திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்  தொடங்கி வைத்தார் .

தொடர்ந்த, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்  முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும்,   புதிய பூங்காக்கள், மைதானம், வணிக வளாகங்கள், குடிநீர்த் திட்டங்களுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.