திருச்சி: போதை பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருள் நெட்வொர்க்கை அழிக்க வேண்டும்.. குழந்தைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

‘தமிழ்நாட்டில் போதை பொருள் இதுவரை இல்லாத அளவுக்கு கொடிகட்டி பறக்கிறது. போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல்களில் அரசியல் கட்சியினரே ஈடுபடுவதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் சட்டவிரோத சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட திருவள்ளுர் ரெயில் நிலையத்தில், வடமாநில நபரை போதை சிறுவர்கள் சிலர் சேர்ந்து கத்தியால் வெட்டிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், மதிமுக பொதுச் செயலா் வைகோ, தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி சமத்துவ நடைபயணத்தை அறிவித்தார். அதன்படி அவரது நடைபயணம் இன்று தொடங்குகிறது. இந்த நடை பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
திருச்சி தென்னூர் மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் வருகை தந்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நடைப்பயணத் தொடக்க விழா அழைப்பிதழின் முகப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம் இடம்பெற்றிருந்ததே காங்கிரஸ் கட்சியின் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். அதில், “வைகோ மேற்கொள்ளும் சமத்துவ நடைபயணம்தான் இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக நடைபயணம் சென்று இருக்கிறார் அண்ணன் வைகோ. காலம் தோறும் இளைய தலைமுறை நன்மைக்காகவும் எதிர்காலத்தின் நன்மைக்காகவும் செயலாற்றுவது திராவிட இயக்கம். தள்ளாத வயதிலும் தொண்டு செய்தவர் பெரியார். திராவிட இயக்க பல்கலையில் படித்தவர்தான் வைகோ. கலைஞரின் பக்கத்தில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ என புகழாரம் சூட்டினார்..
2026-ம் ஆண்டில் நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான். தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என மக்கள் பிரச்சனைக்காக நடைபயணம் சென்றவர் வைகோ. வைகோவிற்கு 82 வயதா? 28 வயதா? என ஆச்சரியப்பட தோன்றுகிறது. வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும் போது அவரது வயதே நமக்கு கேள்வியாகிறது.
தள்ளாத வயதிலும் தளராமல் தொண்டு செய்தவர் தந்தை பெரியார். 83 வயதிலும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர். *கலைஞர் கருணாநிதிக்கு அருகில் இருந்து அரசியல் கற்றுக்கொண்டவர் வைகோ.
கலைஞர் கருணாநிதி நடைபயணம் மேற்கொண்ட போது அவருக்கு பாதுகாப்பாக நடந்தவர் வைகோ. 83 வயதிலும் சமூக வளைதளங்கள் மூலம் இளைஞர்களுடன் அரசியல் பேசியவர் கலைஞர். வைகோவின் சமத்துவ நடைபயணம் மாபெரும் வெற்றி பெற வேண்டும், நிச்சயம் வெற்றி பெறத்தான் போகிறது. தலைவர்கள் மக்களிடம் போய் தங்களது கருத்துகளை கூற நடைபயணம் உதவும். நடைபயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போதுதான் பேசுவார்கள். முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்து நடைபயணத்தை தொடங்கியுள்ளார் வைகோ. வைகோவின் நெஞ்சுரத்தை பார்க்கும்போது அவருக்கு 28 வயது போல எண்ணத் தோன்றுகிறது.
இளைஞர்களுக்கு உரிய உத்வேகத்தை வைகோவிடம் பார்க்க முடிகிறது. திராவிட இயக்க பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் நானும், வைகோவும். மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு கலைஞர் நடைபயணம் சென்றபோது அவருடன் சென்றவர்தான் வைகோ. வைகோவின் இந்த சமத்துவ நடைபயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வு செய்து வந்துள்ளார்.
முதுமையை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு நடைபயணத்தை வைகோ தொடங்கி உள்ளார். நடைபயணத்தால் என்ன பயன் எனக்கேட்கிறார்கள், காந்தியின் நடைபயணம்தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற நடைபயணங்கள் தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டு செல்லும். * இளைஞர்களுக்கு நல்வழி காட்டிட இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவிற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்றார்.
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். போதையின் பாதையில் இருந்து மாணவர்களைக் காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளை பொறுப்போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக் கொள்கிறேன்.
நமது வீட்டு பிள்ளைகள் வழி தவறி போவதை நாம் கண்காணித்து தடுக்க வேண்டும். எல்லாரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்ப வேண்டும். ஒன்றிய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள்கூட வெறுப்பு பேச்சை பேசுகின்றனர். அண்மையில் நாட்டில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாரும் அச்சத்தில் வாழும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அன்பு செய்ய சொல்லித் தர வேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்ய சொல்லித் தருகிறது.
இவ்வாறு தெரிவித்தார்.
[youtube-feed feed=1]