றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
1
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.
இந்நிலையில் அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதாவின் உடல் அங்கு மத சம்பிரதாயங்களை முடித்த பின் இன்று அதிகாலை அண்ணா சாலையில் இருக்கும் ராஜாஜி அரங்குக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று மாலை  4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
ஜெயலலிதாவின்  மறைவையொட்டி தமிழக அரசு ஏழு நாட்கள் துக்கம் அணுசரித்துள்ளது.    மேலும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்துக்கும் இன்று முதல்  3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது.