சென்னை: கீழடியில் 7வதுகட்ட அகழ்வாய்வு  பணியை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து  காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழர்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், அறிவுத்திறனையும்  உலகுக்கு பறைசாற்றும் வகையில் கீழடி அகழ்வாய்வுகளில் கிடைக்கப்பெற்ற அரிய பொருட்களும், ஆதாரங்களும் உள்ளன.  கீழடியில், முதல்முதலாக  மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிடைத்த அரிய தகவல்கள் மூலம், மேலும் அகழ்வாய்கள் தொடரப்பட்டு வருகின்றன. அடுத்தடுத்து, 2வது, 3வது கட்ட அகழ்வாய்வுகளின்போது,  7,818 தொல்பொருட் கள் கண்டெடுக்கப்பட்டன.

அதற்கு மேல் அகழ்வாய்வு நடத்த மத்திய அரசு ஆர்வம் காட்டாத நிலையில,  தமிழகஅரசு தன்னிச்சையாக 4வது கட்ட அகழாய்வுப் பணியை  மேற்கொண்டது. இதில் 5,820 தொல்பொருட்கள் கண் டெடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட 5வது கட்ட அகழ்வாயில் மேலும் அரிய பொருட்கள் கிடைத்தன. சுமார்   750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. அத்துடன் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கலாச்சாரம், மற்றும் அறிவுத்திறன் தொடர்பான கட்டிடங்கள், உறைகிணறுகள் உள்பட பல தகவல்கள் கிடைத்தன. தொடர்ந்து, 6வது கட்ட அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில்  கடந்தஆண்டு நடைபெற்றன. இதில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பணி கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரும் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 7வது கட்ட அகழ்வாய்வு பணியை தொடங்க அனுமதி வழங்க வேண்டும என கோரிக்கை வலுத்து வந்தது.

அதைத்தொடர்ந்து, 7வது  அகழாய்வுப் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.  அதையடுத்து 7-ம் கட்ட அகழாய் வுப் பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  காணொலி் காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

7வது கட்ட அகழ்வாய்வுப்பணி  தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய நான்கு இடங்களில்  நடத்தப்பட உள்ளன.