கடலூர்:
சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், பஞ்ச மூா்த்திகள் வீதி உலா, தங்க கைலாச வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், தங்க ரதத்தில் பிச்சாண்டவா் வீதி உலாவும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

தேரோட்டத்தில் சித் சபையில் வீற்றுள்ள நடராஜமூா்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவ மூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகிய ஐவரும் தனித் தனி தோ்களில் வீதிவலம்
வந்தனர்.