சென்னை: இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, இன்று நடைபெற இருந்த புதுச்சேரி பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும், தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன; தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும்  என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, திருவண்ணாமலை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி,  இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரியில் நடைபெறும் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் இந்த தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.