16 பெண்களை கற்பழித்து துன்புறுத்திய சட்டீஸ்கர் போலீசார்: மனித உரிமை ஆணையம் தகவல்

Must read

பிஜாப்பூர்:

சட்டீஸ்கர் மாநிலத்தில் 16 பெண்களை மாநில போலீசார் கற்பழித்து, துன்புறுத்தியிருப்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
சட்டீஸ்கர் மாநிலத்தில் 16 பெண்கள் மாநில போலீசாரால் கற்பழிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருப்பதற்காக முகாந்திரங்கள் கிடைந்துள்ளது. இவர்களை போல் மேலும் பாதித்த 20 பேரது வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக காத்திருக்கிறோம்.

கடந்த 2015ம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் வேட்டையின் போது மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களின் பெயரை குறிப்பிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்துடைப்பு விசாரணை மட்டுமே நடந்துள்ளது.

பாதிக்கபப்ட்ட பெண்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 37 லட்சம் வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் சட்டீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், மாநில அரசும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களை சேர்ந்த 40 பெண்களை போலீசார் பாலியல் ரீதியாகவும், அடித்தும் துன்புறுத்தினர். 40 பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். இரண்டு பெண்களும் ஒரு குழுவினரால் கற்பழிக்கபப்ட்டனர்.

ஆனால் கிராம மக்கள் 14 வயது சிறுமி உள்பட 4 பேர் கற்பழிக்கப்பட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

More articles

Latest article