சென்னை: செட்டிநாடு குழுமத்துக்கு சொந்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.700 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில் செட்டிநாடு குழுமத்தில் டிசம்பர் 10ந்தேதிஅன்று வருமான வரி சோதனைகள் நடைபெற்றன. சென்னையில் உள்ள செட்டிநாடு அரண்மனை உள்பட, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட மற்ற பகுதிகளில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தனமா அலுவலகங்கள், உரிமையாளர்களின் வீடுகள், குடியிருப்புகள் உள்பட 50 க்கும் மேற்பட்ட இடங்களிள்ல ரெய்டு நடைபெற்றன.
இந்த ரெய்டில் சிக்கியது குறித்து வருமானவரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, செட்டிநாடு குழுமம் ரூ.700 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது என அறிவிக்கப்படு உள்ளது.
செட்டி குழுமத்துக்கு சொந்தமான நாடு முழுவதும் உள்ள சுமார் 60 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும், இதில் ணக்கில் வராத ரூ.23கோடி ரொக்கம் சிக்கியது , வெளிநாட்டு வங்கிகளில் ரூ.110 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மருத்துவ மேற்படிப்பிற்கு நன்கொடை பெற்றதை குறிக்கும் வகையிலான சில ரசீதுகளும் சிக்கியுள்ளன என்றும், போலி ஆவணங்கள் சமர்பித்து ரூ.435 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது என்று வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.