செஸ் ஒலிம்பியாட் : போட்டியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என 4000 பேருக்கு நினைவு பரிசு…

Must read

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கியது.

நடிகர் கமலஹாசன் வர்ணனையில் இடம்பெற்ற தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வீரம் குறித்த கலை நிகழ்ச்சியும் லிடியன் நாதஸ்வரத்தின் இசையும் வந்திருந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்தது.

இதுபோல் போட்டி நடைபெறும் அரங்கிற்கு வரும் போட்டியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவருக்கும் மகாபலிபுரம் கடற்கரை கோயிலின் மொமென்டோ அடங்கிய ‘வெல்கம் கிட்’ வழங்கப்பட்டுள்ளது.

போட்டிகளின் புள்ளிவிவரங்களை குறிக்க வீரர்களின் பெயருடன் கூடிய அறிவிப்பு பலகைகள் மற்றும் வீரர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களை வைக்க மேஜையின் கீழ் தனி இடம் என்று சிறு சிறு விஷயங்களையும் போட்டி அமைப்பாளர்கள் கவனமுடன் செய்துள்ளனர்.

அரங்குக்கு வெளியில் உள்ள உணவகங்களிலும் வெளிநாட்டு போட்டியாளர்கள் இந்திய உணவுவகைகளை ருசித்து வருவதோடு அனைத்து அமசங்களையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article