தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தன்னை தானே ஹீரோவாக களமிறக்கி கொண்டவர் சேரன்.
பல வெற்றிப்படங்களை கொடுத்த சேரன் சமீப காலமாக தொடர் தோல்வி முகத்தை சந்தித்து வந்தார் இடையில் சிறிது காலம் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டு மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கினார் . இந்த ,படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா நடித்துள்ளார். ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது.
இந்த நிலையில் நடிகர் சேரன், தனது படத்திற்கு விமர்சனம் எழுதுவில்லை என்கிற காரணத்தால் தனக்கு கிடைத்த விருதினை அதற்கு உரிய யூடுயூப் சேனலுக்கு திருப்பி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேரனுக்கு கே எஸ் ரவிக்குமார் இந்த விருதினை அளித்திருந்தார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன், தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. மண்டியிட்டு இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை. விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது என்று பதிவிட்டுள்ளார்.