சென்னை:

மிழகத்தில் பிரபலமான சென்னை லயோலா கல்லூரி, இரு திருநங்கைகள் கல்லூரி மேல்படிப்பு படிக்க   அட்மிஷன் வழங்கி புதிய சாதனை செய்துள்ளது. இதுபோல மற்ற அனைத்து கல்லூரி களிலும் திருநங்கைகள் உயர்கல்வி படிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மிருதுளா, தியாக‘ ஆகிய  இரண்டு திருநங்கைகளும், லயோலா கல்லூரியில், இந்த ஆண்டு  மற்ற மாணவர்களுடன் இணைந்து தங்கள் இளங்கலைப் படிப்பைத் தொடர உள்ளனர். இது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் திருநங்கைகள் எனப்படும் மூன்றாம் பாலித்தவர்களின் முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசின் காவல்துறை உள்பட பல்வேறு துறைகளில் திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பல தனியார் துறைகளிலும் சாதனை செய்து வருகின்றனர்.

திருநங்கைகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில், சென்னை லயோலா கல்லூரி மிருதுளா மற்றும் தியா என்கிற இரு திருநங்கைகளுக்கும் இளங்கலைப் படிப்பைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

19 வயதான மிருதுளா  பிபிஎம் அனிமேஷன் படிப்பிலும், 21 வயதான தியா, பிரஞ்சு இலக்கியப் படிப்பிலும் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.

“இரண்டு மாணவர்களும் தங்கள் தகுதி அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறார்கள். இருவரும் மற்ற மாணவர்களுடன் இணையாக இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் கல்லூரியில் படிப்பதற்கு தகுதியுடையவர்கள் “என்று லயோலா கல்லூரியின் அதிகாரியான ஜஸ்டின் பிரபு கூறினார்.

சகோதரன், தோழி, மற்றும் இந்திய ட்ரான்ஸ்ஜெண்டர் இனிஷியேடிவ் ஆகிய தன்னார்வ தொண்டு அமைப்பின் மூலம் தகுதியின் அடிப்படையில் திருநங்கை மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும்,  இரு மாணவர்களும், திறமை வாய்ந்தவர்களாக இருப்பதனால், எங்கள் கல்லூரியில் படிக்கும் தகுதி அவர்களுக்கு முற்றிலுமாக உள்ளது.

இவர்கள் படிப்புக்காக  கல்லூரி ஒரு உதவித்தொகை வழங்கும் என்றும், அவர்கள்  சமூகக் களங்கம் மற்றும் வறுமை ஆகியவற்றில் இருந்து உயர்ந்த நிலையை சென்றடைய ஒரே வழி, உயர் கல்வியை தொடருவதான் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும்,  இதுவரை ஐந்து திருநங்கை மாணவர்கள் கல்வி உதவித்தொகை மூலமாக பட்டம் பெற்றுள்ளனர் என்றாலும், இந்த முறை முதல் தடவையாக இளங்கலைத் பட்டப் படிப்பில் இரண்டு மாணவர்களை அனுமதித்திருப்பது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து கூறியதா, தியா, லயோலா தனது கனவுக் கல்லூரி என்று  தெரிவித்து உள்ளார். அதுபோல, பிஎம் அனிமேஷன் படிப்பை படிக்கவிருக்கும் மிருதுலா, டிரான்ஸ் மாடலாக மாறி, தரமான கல்வி மூலம் தங்கள் கனவுகளைத் தொடர இயலும் என்று நிரூபித்து, திருநங்கை சமூகத்திலுள்ள மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும், எனக் கூறுகின்றனர்.

எங்களை குடும்பம் நிராகரித்தாலும்,  சமுதாயம் எங்களைப் போன்றோரைப் பற்றி நினைக்கும் எண்ணத்தை  நான் மாற்ற விரும்புவதாக மிருதுளா கூறி உள்ளார்.ஹ

இதுகுறித்து கூறிய லயோலா கல்லூரி அதிகாரிகள், “திருநங்கைகளுக்கு வாய்ப்பளிப்பது முதல் முறையல்ல. இதுவரை, குறைந்தது ஆறு திருநங்கைகள் எங்கள் கல்லூரியில் படித்து வெளியேறி யுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

லயோவை மற்ற தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் பின்பற்றுமா? அவர்களின் வாழ்க்கை முன்னேற வழி வகை செய்யுமா?