சென்னை
இன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பழமையான உயிரியல் பூங்கா வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகும். இந்தப் பூங்காவைச் சுற்றிப்பார்க்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குச் செவ்வாய்க் கிழமைகளில் விடுமுறை விடப்படும். இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகவே இன்று பார்வையாளர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று இயங்கும் எனப் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel