சென்னை:
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப் படுவதாகவும், ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிவிப்பு சென்னைப் பல்கலைகழகத்தின் யின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் அறிவிப்பு பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.