சென்னை:
சென்னையில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது.
இந்தியாவையே பரபரப்குள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயில் கொள்ளை விவகாரத்தில் 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ரெயில்வே பாதுகாப்பு படையும், 5 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
ரெயில் பெட்டியின் மேற்புரத்தில் துளையிட்டு சுமார் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கொள்ளை பற்றிய துப்பு மற்றும் தடயங்களை தேடி காவல்துறையினர் ஒவ்வொரு ரெயில் நிலயமும் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரெயிலில் கொண்டு வரப்பட்ட வங்கி பணம் சுமார் ரூ.6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதும், அதில் இருவர் பிடிப்பட்டு விட்டதாகவும் சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எஞ்சிய 3 பேரை பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel