சென்னையில் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 கல்வி கருத்தரங்கு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தக் கருத்தரங்கில் ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்கல்வி, உயர்கல்வி பாடத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ள இந்த கருத்தரங்கில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இந்த கருத்தரங்கு கல்வித் துறையில் இந்தியாவின் சாதனைகள் மற்றும் ஸ்வயம், நிபுன் பாரத், தீக்ஷா, ஆராய்ச்சி மற்றும் தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்று ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel