நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆக்லாந்து நகரில் நேற்று பெய்த கனமழையால் அந்நகரமே நீரில் மூழ்கியது.

கோடை காலம் முழுவதும் பெய்யும் மழையில் 75 சதவீதம் மழை 15 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள் வெள்ளக்காடானது, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின, தண்ணீர் புகுந்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

எல்டன் ஜான் இசைநிகழ்ச்சி நடைபெற இருந்த நிலையில் 40,000 க்கும் மேற்பட்டோர் அந்த இசைநிகழ்ச்சியை காண குவிந்தனர்.

இசை நிகழ்ச்சி துவங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னர் பேய் மழை துவங்கியதை அடுத்து இசைநிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதுடன் நிகழ்ச்சியைக் காண வரும் ரசிகர்கள் அப்படியே திரும்பிச் செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளம் வடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்றும் கனமழை காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ள சாலைகள் மற்றும் மின்விநியோகம் ஆகியவற்றை சீர் செய்யும் பனி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தவிர ஆக்லாந்து நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் அறிவித்துள்ளார்.