சென்னையில் 30.83 ஏக்கர் பரப்பளவில் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

Must read

சென்னை:

மிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர்.

சிப்காட்டுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சிப்காட் வல்லம் வடகல் தொழில்துறை பூங்காவில் மொத்தம் 30.83 ஏக்கர் நிலம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்படும் என்றும், அந்நிறுவனத்தில் 19,500 ஊழியர்கள் பணிபுரிவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உயர்மட்ட ஐபோன்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க துவங்கும், ஆப்பிள் நிறுவனத்திற்காக சிப்காட்டில் 150 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது, ஆப்பிள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் உற்பத்தியை துவங்கியது.

ஆப்பிள் நிறுவன ஐபோன்களை தயாரிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் 1 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த திட்டம் அங்கு பணிபுரியும் 19,500 ஊழியர்களுக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் மலிவான வாடகையில் தங்குமிடத்தை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article