டெல்லி: பொங்கல் பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

பொங்கல் விடுமுறையை ஒட்டி தாம்பரம் – தூத்துக்குடி – தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும், தாம்பரம் – நெல்லை – தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது

வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி, விரைவாக முடிந்தது. வரும் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ரயில்களில் முன்பதிவு செய்யமுடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

தற்போது பேருந்து ஸ்டிரைக் நடைபெற்று வருவதால், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், முன்பதிவில்லாத ரயில்  தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளன. இதில்  முதல்கட்டமாக சில   சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ஜன. 14,16-ம் தேதியும், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து ஜன. 15,17-ம் தேதி ஜன் சதர்ன் விரைவு ரயில் (24 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லாத ரயில்) இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, தாம்பரம் – திருநெல்வேலி இடையே வரும் 11, 13, 16-ம் தேதிகளிலும், திருநெல்வேலியில் இருந்து ஜன. 12, 14, 17-ம் தேதிகளிலும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மேலும், கோவை-சென்னை எழும்பூர் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும்,  வரும் 14 ஞாயிறு மற்றும் 16 செவ்வாய் தாம்பரத்திலிருந்து தூத்துக்குடிக்கு முற்றிலும் முன்பதிவில்லா பெட்டிகளோடு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்,  தாம்பரத்தில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக  இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி சென்டையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.