சென்னையில் நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதை அடுத்து புறநகர் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்ட்ரல் – அரக்கோனம் உள்ளிட்ட அனைத்து வழித்தடத்திலும் காலை எட்டு மணி வரை மின்சார ரயில்கள் இயக்குவதை நிறுத்திவைத்துள்ளது.
Due to heavy rains and water logging,
suburban train services in all the Chennai Suburban sections have been temporarily suspended upto 08.00hrs. of today (4th Dec)Only Passenger Specials will be operated in these sections sections until further advice#CycloneMichuang
— Southern Railway (@GMSRailway) December 4, 2023
புயல் காரணமாக தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை இந்த வழித்தடங்களில் உள்ள பயணிகள் சிறப்பு ரயில் சேவை மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.