சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில்
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.
தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாகப் பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சம் கிடைக்கும் என்பார்கள்.
அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமப்பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.
காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாகப் பெற்றிருப்பதாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைவிடம் : சென்னை பாரி முனையில்,கிழக்கு கோபுரம் 212, தம்பு செட்டி தெரு ,மேற்கு கோபுரம் அரண்மனைக்கார தெரு.
கோவில் திறந்து இருக்கும் நேரம் : 5 AM TO 12NooN ,5 PM TO 9 PM
தீர்த்தம்: : கடல் நீர்
தலவிருட்சம்: : மாமரம்
பிரமோற்சவம்: : வைகாசி மாதம் .
சிறப்பு நாட்கள்: : செய்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ராகு காலம்
பண்டிகைகள்: : அனைத்து அம்மன் சம்பந்தப்பட்ட பண்டிகைகளும்
கோவில் நிறுவப்பட்ட வருடம்: : 15 ஆம் நூற்றாண்டு .